அசோகனின் பாறை சாசனம் பதின்மூன்று (Rock Edict XIII)

🛞 தர்மத்தின் வெற்றி 🛞

முடிசூடி எட்டு வருடங்களான பின் தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் கலிங்கத்தை வெற்றிக்கொண்டான். அப்போது நூற்றைம்பதினாயிரம் மக்கள் கைது செய்யப்படவும் பதினாயிரம்¹ மக்கள் மாண்டுபோகவும், அதிலும் பல மடங்கு மக்கள் வேறு விதத்தில் இறக்கவும் நேர்ந்தது. கலிங்கத்தைக் கைப்பற்றிய பிறகு தேவர் பிரியன் தர்மத்தில் பற்றுள்ளவனாய், தர்மத்தை விரும்பி, தர்மத்தை வழிபட்டு வாழ்பவனாக ஆனான்.

Continue reading

நாரணனால் கொட்டுவிக்கப்பட்ட பொன்னியக்கி

நந்திப் போத்தரசன் என்றழைக்கப்படும் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட பொன்னியக்கியின் (யக்ஷியின்) சிற்பத்தைக் கொண்டிருக்கும் பஞ்சப் பாண்டவர் மலையின் (திருப்பாண்மலை) குடைவரைக் கோயிலுக்கு கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி சென்றிருந்தேன். ‘கண்ணமங்கலம் – ஆற்காடு’ செல்லும் சாலையில் இந்த மலை அமைந்துள்ளது.

Continue reading

ஒரு பின்நவீனத்துவ இதிகாசம்

“அந்தி யாத்திரைகளின் தந்தையே, விடைகொடுங்கள். வெள்ளெருக்கின் இலைகள் சேர்த்துத் தைத்த இந்த மறுபிறவியின் கூடுவிட்டு நான் மீண்டும் பயணிக்கிறேன்.”

Continue reading

இயற்பியல் பற்றிய ஏழு சுருக்கமான பாடங்கள்

என் பள்ளிப் பருவம் முதலே இயற்பியல் மீதான ஆர்வமும், ஒருவித ஒவ்வாமை உணர்வும் சேர்ந்தே எனக்குள் இருந்து வந்திருக்கின்றன. ஆர்வம் இருந்ததற்கான காரணம், இயற்பியல் நன்கு புரியவில்லை என்றாலும் ‘அது விளக்க முற்படும் விஷயங்கள் யாவும் என்னைச் சுற்றியிருப்பவையே!’ என்னும் உள்ளுணர்வு இருந்தமையால். ஒவ்வாமை உணர்விற்குக் காரணம், இயற்பியலை நன்கு புரியும்படியாக எளிமைப்படுத்திச் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் நான் பயின்ற இடத்தில் எனக்கு அமையவில்லை என்று துணிந்து கூறுவேன். இன்று சுய ஆர்வத்துடன் ஸ்டீபன் ஹாகிங், ரிச்சர்டு ஃபெயின்மான், மிச்சியோ காக்கு போன்ற இயற்பியல் ஆசான்களின் நூல்கள் மற்றும் கட்டுரைகளை வாசிப்பதன் மூலமும், அவர்கள் ஆற்றிய உரைகளை யூட்யூப்பில் அவ்வப்போது காண்பதன் வாயிலாகவும் இயற்பியல் எத்தனை அற்புதமானது என்றும், அதை எந்தளவிற்கு ஒருவருக்கு எளிமைப்படுத்திப் புரிய வைக்க முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

Continue reading

கவிமணி: நினைவோடை

சுரா எழுதிய ‘கவிமணி: நினைவோடை’ நூலை ஒரு சிறிய பொக்கிஷம் என்பேன். கவிமணியை மிகவும் அருகிலிருந்து பார்த்து பேசியது போன்ற உணர்வை எனக்கு அளித்தது. கவிமணியின் குறிப்பிடத்தக்க படைப்பென்று சுரா விரித்துரைத்த, “நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்” என்னும் அங்கதக் கவிதைநூலை விரைவில் வாங்கி வாசிக்க வேண்டும். கவிமணிக்கு வெளியுலகத் தொடர்புகள் அதிகம் இல்லை என்றாலும், அவர்தம் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே அவருக்கான உரிய அங்கிகாரம் கிடைத்தது என்றாலும், அவரது காலக்கட்டத்தில் வாழ்ந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், டி.கே.சி, ராஜாஜி, கல்கி, எஸ். வையாபுரிப்பிள்ளை, கலைவாணர் போன்ற பல ஆளுமைகள் அவர் இருக்குமிடம் தேடிவந்து அவருடன் பேசிவிட்டு, தொடர்ந்து நல்லுறவை பேண விரும்பியிருக்கிறார்கள் என்று அறிந்த போது ஆச்சரியப்பட்டேன். பாடப் புத்தகங்களிலும், அவற்றுக்கும் வெளியே சில கவிதைகளையும் வாசித்தது போக கவிமணியைப் பற்றிய அறிவு துளியும் எனக்கு இருந்ததில்லை. சுராவின் இந்த நினைவோடை ஒரு கண்திறப்பாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. பின் இணைப்பில் கவிமணியின் சில புகைப்படங்களையும், காலவரிசையையும் இணைத்து – கவர்ச்சியான அட்டை வடிவமைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

Continue reading

AD ME EX INDIA REGUM

The earlier mention of the term ‘India‘ in the Roman emperor Augustus’s “Res Gestae Divi Augusti (The Deeds of the Divine Augustus)”, a Latin epitaph inscribed on the walls of the temple of Rome and Augustus at Ancyra (modern Ankara, Turkey), capital of the Roman province of Galatia, giving the Latin text and official Greek paraphrase of the official account of his reign. In ‘res gesteae‘, Augustus mentioned that he had received embassies that were frequently sent to him from Indian kings.

Continue reading

பல்லவர் காலத்து ஏரிகள்

பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சில முக்கியமான ஏரிகளின் பட்டியல் இவை. நூல்கள் மற்றும் இணையத் தரவுகளைக் கொண்டு நான் தொகுத்தவை. இப்பட்டியலில் விடுபட்ட பல்லவர் காலத்து ஏரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பேன். கல்வெட்டுச் சான்றுகள் உள்ள ஏரிகள் இவை. சான்றுகள் கிடைக்காத பல பல்லவர் காலத்து ஏரிகளும் உள்ளன.

Continue reading

பல்லவர்களை அறிவோம் 1

  • தென்னிந்தியாவில் வெண்சாந்துப் பூச்சைக் கொண்டு வண்ண ஓவியங்களைத் தீட்டியவர்களில் முன்னோடிகள் யார்?

– பல்லவர்கள்

  • தென்னிந்தியாவில் பாறைகளைக் குடைந்து சிற்பங்களையும், கோயில்களையும் உருவாக்கியவர்கள் யார்?

– பல்லவர் மற்றும் பாண்டியர்

Continue reading

த ஸிஸ்டம் (அமைப்பு) — 1

— எதுவர்தோ கலியானோ

தமிழில்: சக்கரவர்த்தி பாரதி

அதிகாரிகள் செயலாற்றுவதில்லை.

அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். ஆனால், எதுவும் சொல்வதில்லை.

வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், தேர்ந்தெடுப்பதில்லை.

Continue reading

நான் எப்படி எழுத ஆரம்பித்தேன்

— காப்ரியல் கார்சியா மார்க்கேஸ்

தமிழில்: சக்கரவர்த்தி பாரதி

நான் அமர்ந்தவாறு பேசுவதற்கு முதலில் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையில் நான் நின்றவாறு பேசினால், அச்சத்தின் காரணமாக நான் நிலைத்தடுமாறிவிடக் கூடிய ஆபத்துள்ளது. உண்மையாக. இருபது அல்லது முப்பது நபர்களுக்கு முன்னால் மிக பயங்கரமான ஐந்து நிமிடங்களை விமானத்தில் செலவழிப்பது தான் என் விதியாக இருக்குமென்று நான் நினைத்திருந்தேன். இதுபோல இருநூறு நண்பர்களுக்கு முன்னால் (பேசுவேன்) என்று நினைத்ததில்லை. அதிர்ஷ்டவசமாக, தற்போது எனக்கு நிகழ்ந்துக் கொண்டிருப்பது எனது இலக்கியத்தைப் பற்றி என்னைப் பேச அனுமதிக்கிறது.

Continue reading