இயற்பியல் பற்றிய ஏழு சுருக்கமான பாடங்கள்

என் பள்ளிப் பருவம் முதலே இயற்பியல் மீதான ஆர்வமும், ஒருவித ஒவ்வாமை உணர்வும் சேர்ந்தே எனக்குள் இருந்து வந்திருக்கின்றன. ஆர்வம் இருந்ததற்கான காரணம், இயற்பியல் நன்கு புரியவில்லை என்றாலும் ‘அது விளக்க முற்படும் விஷயங்கள் யாவும் என்னைச் சுற்றியிருப்பவையே!’ என்னும் உள்ளுணர்வு இருந்தமையால். ஒவ்வாமை உணர்விற்குக் காரணம், இயற்பியலை நன்கு புரியும்படியாக எளிமைப்படுத்திச் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் நான் பயின்ற இடத்தில் எனக்கு அமையவில்லை என்று துணிந்து கூறுவேன். இன்று சுய ஆர்வத்துடன் ஸ்டீபன் ஹாகிங், ரிச்சர்டு ஃபெயின்மான், மிச்சியோ காக்கு போன்ற இயற்பியல் ஆசான்களின் நூல்கள் மற்றும் கட்டுரைகளை வாசிப்பதன் மூலமும், அவர்கள் ஆற்றிய உரைகளை யூட்யூப்பில் அவ்வப்போது காண்பதன் வாயிலாகவும் இயற்பியல் எத்தனை அற்புதமானது என்றும், அதை எந்தளவிற்கு ஒருவருக்கு எளிமைப்படுத்திப் புரிய வைக்க முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

Continue reading